மனைவியின் உறவுப்பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பிய ஆந்திர வாலிபர் கைது


மனைவியின் உறவுப்பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பிய ஆந்திர வாலிபர் கைது
x
தினத்தந்தி 31 July 2018 4:00 AM IST (Updated: 31 July 2018 1:36 AM IST)
t-max-icont-min-icon

ஆண்மை இல்லாதவர் என்று கூறியதால் ஆத்திரம் அடைந்து, மனைவியின் உறவுப்பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பிய ஆந்திர வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பூர்,

சென்னை கொடுங்கையூர் முத்தமிழ்நகர் 23-வது தெருவை சேர்ந்தவர் அனுஷா (வயது 27). இவருக்கும், ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த விபாவாசு (32) என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த 15 நாட்களுக்குள் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் அனுஷா கொடுங்கையூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். கடந்த 2 ஆண்டுகளாக பெற்றோர் வீட்டிலேயே இருக்கும் அனுஷா, விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனு செய்து உள்ளார்.

அந்த மனுவில் அவர், தனது கணவர் விபாவாசுக்கு ஆண்மை இல்லை என்று குறிப்பிட்டு உள்ளதாக தெரிகிறது. மேலும் இதுகுறித்து தனது உறவினர்களிடமும் அனுஷா தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் அனுஷாவின் உறவினர்கள் விபாவாசு பற்றி பல இடங்களில் தவறாக பேசியுள்ளனர். இதை அறிந்து ஆத்திரம் அடைந்த விபாவாசு, தான் மற்றொரு பெண்ணுடன் உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச படத்தை அனுஷாவின் உறவுப்பெண் ஒருவருக்கு செல்போன் மூலம் அனுப்பினார்.

மேலும் அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியுள்ளார். இதுகுறித்து அவர் எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதனையடுத்து எம்.கே.பி. நகர் போலீஸ் உதவி கமிஷனர் அழகேசன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் ஐதராபாத்துக்கு நேரில் சென்று விபாவாசுவை சென்னைக்கு அழைத்து வந்தனர்.

அவரிடம் விசாரணை நடத்தி செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது அவர் ஆபாச படம் அனுப்பியது உண்மை என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபாவாசுவை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Next Story