கருணாநிதியின் உடல் நலக்குறைவு பற்றி சமூக வலைத்தளங்களில் வதந்தியால் தி.மு.க.வினர் சாலை மறியல்
கருணாநிதியின் உடல் நலக்குறைவு பற்றி சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்தியால் சிறுவாச்சூரில் தி.மு.க.வினர் சாலை மறியல் செய்தனர். மர்ம நபர்கள் 2 அரசு பஸ்களின் கண்ணாடியை கல்வீசி உடைத்தனர்.
பெரம்பலூர்,
கருணாநிதி பூரண நலம் பெற்று வர வேண்டும் என்ற நோக்கத்தில் பெரம்பலூர் நகரில் பல்வேறு இடங்களில் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. அதில் கருணாநிதியை மீண்டு வா தலைவா.. மீண்டும் வா... என்றும், பீடர் கொண்ட சிங்கமே எழுந்துவா தலைவா என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்ததை காண முடிந்தது. பெரம்பலூரில் பல்வேறு இடங்களில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பூரண நலம் பெற்று வர வேண்டும் என்று கட்சியினர் பிரார்த்தனை செய்தனர்.
இதே போல் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் கருணாநிதி உடல்நிலை பற்றி சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்தி, தவறான செய்திகளை வெளிவந்ததால் பெரம்பலூரில் வணிகர்கள் தங்களது கடைகளை வேகம், வேகமாக அடைத்து விட்டு சென்றதை காணமுடிந்தது. மேலும் பெட்ரோல் பங்க்கில் பொதுமக்களுக்கு தங்களது இரண்டு, நான்கு சக்கர வாகனங்களுக்கு அதிகளவில் பெட்ரோல் போட்டு சென்றனர். மேலும் ஷேர் ஆட்டோக்களின் உரிமையாளர்கள் ஆட்டோக்களுக்கு அதிகளவில் டீசல் நிரப்பி சென்றனர். இதனால் பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல்-டீசல் போட வாகனங்கள் அணிவகுத்து நின்றதை காணமுடிந்தது.
இந்நிலையில் கருணாநிதி உடல்நிலை பற்றி சமூக வலைத்தளங்களில் தவறான செய்திகளும், வதந்திகளை பரவியதை தொடர்ந்து சிறுவாச்சூர் கிராமத்தில் உள்ள தி.மு.க.வினர் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் பெரம்பலூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கருணாநிதி உடல்நிலை குறித்து தெளிவாக எடுத்துரைத்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. கட்சி அலுவலகத்தின் முன்பு கட்சி தொண்டர்கள் சோகத்தில் காணப்பட்டனர்.
இந்நிலையில் அந்த வழியாக சென்ற 2 அரசு பஸ்களின் பின்பக்க கண்ணாடிகளை மர்மநபர்கள் கற்களை வீசி தாக்கினர். இதில் பஸ்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது. இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனை முன்பு போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். மேலும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான பெரம்பலூர் புதிய, பழைய பஸ் நிலையங்கள், வழிபாட்டு தளங்கள், தினசரி காய்கறி சந்தைகள், அரசு அலுவலகங்கள் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதே போல் பெரம்பலூர் நகர் முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Tags :
Next Story