சொத்து வரி, குடிநீர் கட்டண உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


சொத்து வரி, குடிநீர் கட்டண உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 31 July 2018 3:15 AM IST (Updated: 31 July 2018 2:06 AM IST)
t-max-icont-min-icon

சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டண உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அனுப்பர்பாளையம்,

திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டண உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருமுருகன்பூண்டி சிறப்புநிலை பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பேரூராட்சி முன்னாள் தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் ஈசாக், செல்வராஜ், மோகன், பொன்னுசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தின் போது சொத்து வரி உயர்வு மற்றும் குடிநீர் கட்டண உயர்வை கண்டித்தும் அதை உடடினயாக திரும்ப பெற வலியுறுத்தியும் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் பெண்கள், பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story