குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்திற்கு காலிக்குடங்களுடன் வந்த பொதுமக்கள்
குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி கரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு காலிக்குடங்களுடன் வந்த மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர்,
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை மற்றும் குடிநீர், மின்சாரம், வடிகால் வசதி உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை நேரடியாக பெற்றார். இதில் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் காந்தி நகரை சேர்ந்த பொதுமக்கள் தலையில் காலிக்குடங்களை வைத்துக்கொண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், எங்கள் பகுதியில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது. இது தொடர்பாக ஊராட்சி நிர்வாக அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை. எங்கள் பகுதியில் 2012-13-ம் ஆண்டில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி பயன்படுத்த முடியாத நிலையில் தான் இருக்கிறது. இதனால் குடிநீர்மேம்பாட்டு திட்டத்தின்கீழ் தண்ணீரை கொண்டு வந்து இதில் சேமிக்க முடிவதில்லை. காவிரி குடிநீர் குழாயின் ஏர்வால்வு பகுதியில் கசிந்து வீணாகும் நீரை பிடித்து பயன்படுத்தி வருகிறோம். எனவே எங்கள் பகுதியில் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இதேபோல் வெள்ளியணை வடபாகம் செல்லாண்டிபட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்களும் காலிக்குடங்களுடன் வந்து கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் கடந்த 7 மாதங்களாக குடிநீர் சரிவர வருவதில்லை. ஆழ்குழாய் கிணற்றில் உள்ள மின்மோட்டார் பழுதடைந்து விட்டதாக அதனை கழற்றி கொண்டு சென்றனர். இன்னும் திரும்பி வந்து அதனை பொருத்தவில்லை. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று கூறியிருந்தனர். காலிக்குடங்களுடன் வந்த மக்களால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர்கள் சங்கத்தின் கரூர் மாவட்ட செயலாளர் வடிவேலன் தலைமையில் கலாராணி, பாக்கியம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கட்டிட தொழிலாளர்கள் கரூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் இருந்து கோஷமிட்டபடியே வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி 5 பேரை மட்டும் மனு கொடுக்க அனுப்பி வைத்தனர். அவர்கள் கொடுத்த மனுவில், தொழிலாளர் நலவாரியத்தில் நலத்திட்ட உதவிகளுக்காக விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும். இயற்கை மரணத்துக்கு ரூ.5 லட்சமும், விபத்து மரணத்திற்கு ரூ.10 லட்சமும் இழப்பீடு வழங்க வேண்டும். ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். பிரசவ உதவித்தொகையாக சம்பள பணத்தை கணக்கிட்டு 6 மாத கால சம்பளமாக ரூ.90 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர்.
கிருஷ்ணராயபுரம் வட்டம் லாலாபேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் நாகராஜன் அளித்த மனுவில், தற்போது ஆடி பெருக்கு வருவதனால் லாலாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி கிராமங்களில் உள்ள மக்கள் அப்பகுதி காவிரி ஆற்றில் நீராடிவிட்டு செல்வர். இதில் வெளியூர் மக்களும் கலந்து கொள்வார்கள். முளைப்பாரியை ஆற்றில் விட்டு இறை வழிபாடு நடத்தவார்கள். இந்த நிலையில் அங்குள்ள காவிரி ஆற்றில் மணல் அள்ளுவதற்கு தனியாக பாதை அமைத்துள்ளதால் ஆற்று நீரானது கரையை தொட்டு செல்லாமல் நடு ஆற்றின் வழியே சென்று விடுகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி ஆற்றுநீரோட்டத்திற்கு தடையாக உள்ள அந்த பாதையை அகற்ற வேண்டும் என்று கூறியிருந்தார்.
கரூர் அருகே வெள்ளியணை தென்பாகம் மேட்டுப்பட்டியை சேர்ந்த சமூக ஆர்வலர் அப்புசாமி உள்ளிட்டோர் அளித்த மனுவில், வீணாக கடலில் சென்று கலக்கும் காவிரி தண்ணீரை குழாய்கள் மூலமாக, 450 ஏக்கர் பரப்பளவுடைய வெள்ளியணை பெரிய குளத்திற்கு கொண்டு வந்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் சுமார் 10 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவர். மேலும் வெள்ளியணை, ஜெகதாபி, பொரணி, சேங்கல், காணியாளம்பட்டி உள்ளிட்ட கிராம மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி அடையும் என்று கூறியிருந்தனர்.
மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
அன்பாலயம் கண்பார்வையற்ற மற்றும் காது கேளாதோருக்கான சிறப்பு பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகளில் மாநில அளவிலான யோகா போட்டியில் முதலிடத்தை பிடித்து ரூ.5,000 பரிசு பெற்ற பிரதீப் என்ற மாணவரையும், பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்ற மாணவ- மாணவிகளையும் மாவட்ட கலெக்டர் அன்பழகன் நெகிழ்ச்சியுடன் பாராட்டினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் பாலசுப்பிரமணியம், ஆதிதிராவிட நல அலுவலர் பாலசுப்ரமணியன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் ஜான்சி, சிறுசேமிப்பு அலுவலர் தமிழ்செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story