நாகர்கோவிலில் கள்ளக்காதலி வீட்டு முன் விஷம் குடித்தவர் சாவு பரபரப்பு தகவல்கள்


நாகர்கோவிலில் கள்ளக்காதலி வீட்டு முன் விஷம் குடித்தவர் சாவு பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 31 July 2018 3:45 AM IST (Updated: 31 July 2018 2:39 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் கள்ளக்காதலி வீட்டு முன் விஷம் குடித்தவர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

நாகர்கோவில்,

சென்னை ஆவடி திருமுல்லைவாயல் எஸ்.எம்.நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 35), தொழிலாளி. இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன. இவருக்கும் நாகர்கோவிலை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

கள்ளக்காதலியை பார்க்க வந்த முருகன் திடீரென்று, கள்ளக்காதலியின் வீட்டு முன்பாக விஷம் குடித்து மயங்கி கிடந்தார். தகவல் அறிந்த வடசேரி போலீசார் அந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணையில் முருகனின் கள்ளக்காதல் விவகாரம் பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:-

முருகனின் கள்ளக்காதலிக்கு சொந்த ஊர் நாகர்கோவில். இவருடைய கணவர் சென்னையில் ஓட்டல் நடத்தி வந்தார். தான் மட்டும் தனியாக ஓட்டல் நடத்துவதற்கு சிரமமாக இருந்ததால் தனது மனைவி மற்றும் குழந்தைகளையும் சென்னைக்கு அழைத்துச் சென்றார். கணவன்- மனைவி இருவரும் சேர்ந்து ஓட்டலை நடத்தி வந்தனர்.

அந்த ஓட்டலுக்கு சாப்பிடுவதற்காக முருகன், தினமும் வரும்போது, ஓட்டல் உரிமையாளரின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கு இடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது. இருவரும் தனிமையில் சந்தித்து வந்தனர்.

இந்த விவகாரம் அந்த பெண்ணின் கணவருக்கு தெரியவரவே குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. ஓட்டல் உரிமையாளர் தனது மனைவியை கண்டித்தார். அப்படி இருந்தும் அவர்களது கள்ளக்காதல் தொடர்ந்தது. உடனே ஓட்டல் உரிமையாளர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு நாகர்கோவிலுக்கு வந்து விட்டார்.

அதன்பிறகு முருகனால் கள்ளக்காதலியை பார்க்கவும் முடியவில்லை. தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. எப்படியாவது கள்ளக்காதலியை சந்தித்தே ஆக வேண்டும் என்ற முடிவுடன் சென்னையில் இருந்து முருகன் நாகர்கோவிலுக்கு வந்தார்.

நாகர்கோவிலில் தனது கள்ளக்காதலி வீட்டுக்கு வந்துள்ளார். முருகனை கண்டதும் அந்த பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார். இனி, நாம் சந்திக்க வேண்டாம். இருவரது வீட்டிலும் பிரச்சினை ஏற்படும். நீங்கள் சென்று விடுங்கள் என்று முருகனிடம் அறிவுரை கூறியுள்ளார்.

ஆனால் முருகன், தனது கள்ளக்காதலை விட்டுவிட மனம் இல்லாமல் இருந்துள்ளார். உடனே அந்த பெண் முருகனை சந்திக்க மறுத்து வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டதாக தெரிகிறது. இதில் மனம் உடைந்த முருகன், கள்ளக்காதலியின் வீட்டு முன்பாக விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Next Story