பொட்டிரெட்டிப்பட்டி, பொன்னார்குளம் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு
பொட்டிரெட்டிப்பட்டி மற்றும் பொன்னார் குளம் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
நாமக்கல்,
நாமக்கல் அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
பொட்டிரெட்டிப்பட்டி போயர் தெரு அருகே உள்ள பொன்னேரி சாலையில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து உள்ள தனிநபர் அங்கு கழிவுநீர் தொட்டி கட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதனால் அரசுக்கு சொந்தமான ஆழ்துளை கிணற்றில் குடிநீரின் தரம் பாதிக்க வாய்ப்பு உள்ளது.
மேலும் அவர் ஊராட்சிக்கு சொந்தமான பாதையையும் ஆக்கிரமித்து பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்து வருகிறார். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.
இதேபோல் சேந்தமங்கலம் அருகே உள்ள காமராஜபுரம் பொன்னார்குளம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
அக்கியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொன்னார்குளம் பகுதியில் விவசாயிகள் பயன்படுத்தி வரும் பாதையை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். விவசாயிகள் இடுபொருட்களை எடுத்து செல்லவும், ஆடு, மாடுகளை ஓட்டிச்செல்லவும் இந்த பாதையை தான் பயன்படுத்தி வருகிறோம். தற்போது அந்த வழித்தடத்தை மறித்து கொட்டாய் போடுகிறார்கள்.
இது குறித்து அரசு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதையை ஆக்கிரமிப்பு செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.

Related Tags :
Next Story