100 நாள் வேலை கேட்டு தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை


100 நாள் வேலை கேட்டு தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 1 Aug 2018 4:15 AM IST (Updated: 31 July 2018 11:03 PM IST)
t-max-icont-min-icon

100 நாள் வேலை கேட்டு தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கோடியாம்பாளையம் கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

தொட்டியம்,

தொட்டியம் ஒன்றியம் அலகரை ஊராட்சி கோடியாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென்று அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 100 நாள் வேலை தங்களுக்கு வேலை வழங்க வேண்டும். சுமார் 11 மாதங்களாக எந்த வேலையும் வழங்காததால் கடும் அவதி அடைந்து வருகிறோம். எனவே உடனடியாக வழங்க வேண்டும் என கோ‌ஷமிட்டனர். இது பற்றி தகவலறிந்த தொட்டியம் ஊராட்சி ஒன்றிய தனி அலுவலரும், ஆணையருமான செந்தில்குமார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தையில், அலகரை ஊராட்சி கோடியாம்பாளையத்தில் வாய்க்கால் தூர்வாரும் பணி, மண் வரப்பு அமைக்கும் பணி, கசிவு நீர் குட்டை வெட்டும் பணி, சாலை அமைக்கும் பணிகளுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனரின் நிர்வாக அனுமதி பெற்று ஒரு வார காலத்திற்குள் பணிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் தெரிவித்தார். இதனையடுத்து கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story