பணம் பறிக்கும் திட்டத்தில் டாஸ்மாக் கடை விற்பனையாளர் மீது தாக்குதல் போலீசார் வலைவீச்சு
கரூர் அருகே பணம் பறிக்கும் திட்டத்தில் டாஸ்மாக் கடை விற்பனையாளர் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வெள்ளியணை,
கரூர் தாந்தோன்றிமலை ஏமூர்ரோடு பகுதியை சேர்ந்தவர் வடிவேல்(வயது 34). இவர் வெள்ளியணையை அடுத்த பாகநத்தத்திலுள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வடிவேல் டாஸ்மாக் கடையை பூட்டி விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது தம்மநாயக்கன்பட்டி பகுதியில் வந்த போது, அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் 3 பேர் திடீரென வடிவேலை வழிமறித்து உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் அவருக்கு தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியது. மேலும் அந்த நபர்கள், வடிவேலிடம் பணம் ஏதும் இருக்கிறதா? என பார்த்துள்ளனர். பணம் இல்லை என தெரிந்ததும் அந்த நபர்கள் உடனடியாக தங்களது மோட்டார் சைக்கிள்களில் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
வடிவேலுக்கு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வெள்ளியணை போலீசார் விசாரணை மேற்கொண்டு, டாஸ்மாக் கடை விற்பனையாளர் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த நிலையில் டாஸ்மாக் அனைத்து பணியாளர் சங்க கூட்டமைப்பின் சார்பில் நிர்வாகிகள் நேற்று வடிவேலுவுக்கு ஆறுதல் கூறினர்.
இதுகுறித்து அந்த சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பி.வி.ராமலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-
டாஸ்மாக் கடை விற்பனையாளர் வடிவேலை தாக்கியவர்கள் மீது போலீஸ்துறையினர் கைது நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட மலைக்கோவிலூரில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் ஊழியரை தாக்கி மர்ம நபர்கள் பணம் பறித்தனர். எனவே டாஸ்மாக் நிர்வாகம் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பினை உறுதிசெய்ய வேண்டும். தற்போது டாஸ்மாக் கடைகள் ஊரிலிருந்து 10 கிலோ மீட்டர் தள்ளி இருப்பதால் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. சென்னை, கோவை நகரங்களை போல் வங்கி நிர்வாகத்தினர் நேரடியாக கடைக்கு வந்து விற்பனை தொகையை பெற்று செல்லும் வகையில் கரூரில் ஏற்பாடு செய்ய வேண்டும். இது தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தியும், வடிவேல் தாக்கப்பட்டதை கண்டித்தும் கரூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story