வாலிபருடன் பேசியதை வீட்டில் சொல்லிவிடுவேன் என மிரட்டி சிறுமியிடம் நகை பறித்த அழகு நிலைய பெண் ஊழியர் கைது
தார்டுதேவில், வாலிபருடன் பேசியதை வீட்டில் சொல்லிவிடு வேன் என மிரட்டி பக்கத்து வீட்டு சிறுமியிடம் ரூ.30 ஆயிரம் நகை பறித்த அழகு நிலைய பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
தார்டுதேவில், வாலிபருடன் பேசியதை வீட்டில் சொல்லிவிடு வேன் என மிரட்டி பக்கத்து வீட்டு சிறுமியிடம் ரூ.30 ஆயிரம் நகை பறித்த அழகு நிலைய பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
அழகு நிலைய பெண் ஊழியர்
மும்பை தார்டுதேவை சேர்ந்த அழகு நிலைய பெண் ஊழியர் திக்சித்தா(வயது22). இவரது பக்கத்து வீட்டில் 14 வயது சிறுமி ஒருவள் வசித்து வருகிறாள். கடந்த சில தினங்களுக்கு முன் அந்த சிறுமி வாலிபர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்ததை திக்சித்தா பார்த்து உள்ளார்.
இருவரையும் சந்தேகித்த அவர், இதுபற்றி வீட்டில் கூறி விடுவேன் என அந்த சிறுமியை மிரட்டி உள்ளார். ஆனால் அந்த சிறுமி இருவருக்கும் இடையே எந்த பழக்கமும் கிடையாது என்று கூறினாள். ஆனால் திக்சித்தா அதை ஏற்கவில்லை.
இதை வீட்டில் சொல்லாமல் இருக்க வேண்டுமானால் தான் கேட்கும் போதெல்லாம் வீட்டில் இருந்து நகை, பணத்தை எடுத்து கொண்டு வந்து கொடுக்க வேண்டும் என்று மிரட்டி உள்ளார்.
பெண் கைது
இதனால் பயந்துபோன சிறுமி வீட்டில் இருந்த ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள நகையை எடுத்துக்கொண்டு அவரிடம் கொடுத்து இருக்கிறார்.
மறுநாள் சிறுமியின் தாய் வீட்டை சுத்தம் செய்யும்போது, காதணி ஒன்று கீழே கிடப்பதை பார்த்ததும், நகைகள் காணாமல் போயிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து மகளிடம் கேட்டார். அப்போது சிறுமி நடந்த சம்பவத்தை கூறி அழுதாள்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் தார்டுதேவ் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திக்சித்தாவை ைகது செய்து அவரிடம் இருந்த நகையை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story