மர்ம விலங்கு கடித்து குதறியதில் 4 ஆடுகள் செத்தன


மர்ம விலங்கு கடித்து குதறியதில் 4 ஆடுகள் செத்தன
x
தினத்தந்தி 1 Aug 2018 3:00 AM IST (Updated: 1 Aug 2018 1:53 AM IST)
t-max-icont-min-icon

காங்கேயம் அருகே பட்டிக்குள் அடைக்கப்பட்டிருந்த 4 ஆடுகளை மர்ம விலங்கு கடித்து கொன்றது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

காங்கேயம், 


திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள பாப்பினி கிராமம் உத்தாம்பாளையம் என்ற ஊரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 50), விவசாயி. இவர் 20-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வைத்து வளர்த்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் ஆடுகளை மேய்ச்சலுக்காக சண்முகம் தனக்கு சொந்தமான மூலக்காட்டு தோட்டத்திற்கு கொண்டுசென்றார். பின்னர் அந்தப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பட்டியில் ஆடுகளை கட்டிவைத்து விட்டு வீட்டிற்கு திரும்பி விட்டார்.

நேற்று காலை மீண்டும் பட்டிக்கு சென்று ஆடுகளை பார்த்தார். அப்போது பட்டிக்குள் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளில் 4 ஆடுகள் கழுத்தில் பலத்த ரத்தகாயத்துடன் செத்துக்கிடந்தன. நள்ளிரவில் பட்டிக்குள் புகுந்த மர்ம விலங்கு அங்கிருந்த இந்த ஆடுகளை கழுத்தில் கடித்து கொன்று விட்டு தப்பிச்சென்றுள்ளது தெரியவந்தது.

கடந்த சில நாட்களாகவே இதுபோல் அந்த பகுதியில் உள்ள ஆட்டு பட்டிகளில் மர்ம விலங்குகள் புகுந்து ஆடுகளை கடித்து குதறுவதால் அடிக்கடி ஆடுகள் இறக்கும் பரிதாப நிலை உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். 

Next Story