ரெயில் பயணிகளின் வசதிக்காக நாகர்கோவில்– வேளாங்கன்னி இடையே சிறப்பு ரெயில் இயக்கம்


ரெயில் பயணிகளின் வசதிக்காக நாகர்கோவில்– வேளாங்கன்னி இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
x
தினத்தந்தி 1 Aug 2018 8:15 PM IST (Updated: 1 Aug 2018 8:13 PM IST)
t-max-icont-min-icon

ரெயில் பயணிகளின் வசதிக்காக நாகர்கோவில்–வேளாங்கன்னி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.

நெல்லை,

பயணிகளின் வசதிக்காக நாகர்கோவிலில் இருந்து செப்டம்பர் 2–ந் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் ரெயில் (எண் 06093) மறுநாள் காலை 4.15 மணிக்கு வேளாங்கன்னி சென்றடையும்.

மறுமார்க்கமாக செப்டம்பர் 3–ந் தேதி வேளாங்கன்னியில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (எண் 06094) மறுநாள் காலை 11.05 மணிக்கு நாகார்கோவில் சந்திப்பு வந்து சேரும்.

இந்த சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம் வழியாக இயக்கப்படும். 4 ஏ.சி. பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 13 பெட்டிகள் மற்றும் 3 முன்பதிவில்லா சாதாரண பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.

இந்த ரெயில்களுக்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருவதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story