இரவு பணி முடிந்து சாலையோரம் நிறுத்தி இருந்த அரசு பஸ்சுக்குள் புகுந்து ரூ.6,300– டிக்கெட்டுகள் திருட்டு
கருங்கல் அருகே இரவு பணி முடிந்து சாலையோரம் நிறுத்தி இருந்த அரசு பஸ்சுக்குள் புகுந்து ரூ.6,300, டிக்கெட்டுகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
கருங்கல்,
திங்கள்சந்தை அருகே சூரப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணபிள்ளை. இவர் அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் நாகர்கோவிலில் இருந்து மிடாலம் சென்ற பஸ்சில் பணியில் இருந்தார். இரவு பணி முடிந்த பின்பு, அந்த பஸ்சை கருங்கல் அருகே மிடாலத்தில் சாலையோரம் நிறுத்தி வைத்தனர். பஸ்சுக்குள் டிரைவரும், கண்டக்டர் கிருஷ்ணபிள்ளையும் படுத்து தூங்கினார்கள்.
நேற்று அதிகாலையில் மீண்டும் பணி தொடங்குவதற்காக டிரைவரும், கண்டக்டரும் தயாரானார்கள்.
கண்டக்டர் கிருஷ்ணபிள்ளை தான் வைத்திருந்த பணப்பையை சரி பார்த்த போது அதில் வைத்திருந்த ரூ.6,300 ரொக்கம், மற்றும் பஸ் டிக்கெட்டுகள், 3 செல்போன்கள் போன்றவை மாயமாகி இருந்தன. இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். பஸ் முழுவதும் தேடி பார்த்தும் மாயமான பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.
நள்ளிரவில் கண்டக்டர் பணத்துடன் தூங்குவதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பஸ்சுக்குள் புகுந்து பணம், டிக்கெட், செல்போனை திருடி சென்றுள்ளனர். இந்த துணிகர திருட்டு குறித்து கருங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இரவு பணி முடிந்து சாலையோரம் நிறுத்தியிருந்த பஸ்சுக்குள் புகுந்து பணம், டிக்கெட், செல்போன்களை திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story