இனிவரும் தேர்தலில் தமிழக அமைச்சர்கள் டெபாசிட் கூட பெற முடியாது, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பேச்சு
இனிவரும் தேர்தலில் தமிழக அமைச்சர்கள் டெபாசிட் கூட பெற முடியாது என முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
ஈரோடு,
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் நாளை (வெள்ளிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. அன்று அறச்சலூர் அருகே ஓடாநிலையில் தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் அவரது உருவச்சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். இதற்காக ஈரோடு வரும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்கான அ.ம.மு.க. ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். தலைமை நிலைய செயலாளர் பழனியப்பன், மாநகர் மாவட்ட செயலாளர் பரணீதரன், புறநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கொங்கு மண்டல பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு கூட்டத்தில் பேசியதாக ஆடியோ வெளியானது. அதில் அவர் அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் அவதூறாக பேசி இருக்கிறார். முதல்-அமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் கடந்த முறை நடந்தது தான் கடைசி தேர்தல். இனிவரும் தேர்தலில் அவர்கள் நிற்க மாட்டார்கள். அப்படியே போட்டியிட்டாலும் அவர்களால் டெபாசிட் கூட பெற முடியாது. இதை அறிந்து அவர்களே அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விடுவார்கள். இந்த ஆட்சி முடிவுக்கு வரும்போது அமைச்சர்கள் அனைவரும் குடும்பத்துடன் சிறைக்கு செல்வது உறுதி.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறுகையில், “டி.டி.வி.தினகரன் வீட்டிற்கு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு நடந்தது. அவருக்கு போலீசார் உரிய பாதுகாப்பு கொடுக்கவில்லை. எனவே அவர் செல்லும் இடங்களில் போலீசார் உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும். அரசு அதிகாரிகளுக்கு அ.தி.மு.க.வினர் மிரட்டல் விடுப்பது புதிதல்ல. இந்த நிகழ்வுகளை முடிவுக்கு கொண்டுவர எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி முடிவுக்கு வரவேண்டும். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சிறந்த தீர்ப்பு வந்த பிறகு இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்”, என்றார்.

Related Tags :
Next Story