குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 2 Aug 2018 3:15 AM IST (Updated: 2 Aug 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

மதுரை–தேனிச்சாலையில் குடிநீர் கேட்டு பெண்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட கீழப்புதுர் பகுதியில் கடந்த சில நாட்களாக முற்றிலும் குடிநீர் வழங்கப்படாததால், அந்த பகுதி பொதுமக்கள் கடும் அவதியடைந்து வந்தனர். இதுகுறித்து பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக்கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். மேலும் தொலை தூர பகுதிகளுக்கு சென்று தங்களின் அன்றாட தேவைக்கான தண்ணீர் சேகரித்து வருவதாகவும், இதனால் தாங்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாகவும் அவர்கள் கூறினர். இதையடுத்து ஆத்திரமடைந்த அந்த பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் வந்து மதுரை–தேனிச்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 தகவலறிந்து வந்த உசிலம்பட்டி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் முறையாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்படும் என கூறியதை தொடர்ந்து மறியலை கைவிடப்பட்டது. இந்த மறியலினால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story