வாலிபரை கத்தியால் குத்திய 2 பேர் கைது


வாலிபரை கத்தியால் குத்திய 2 பேர் கைது
x
தினத்தந்தி 2 Aug 2018 3:45 AM IST (Updated: 2 Aug 2018 1:02 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அடுத்துள்ள சிந்தாமணி கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன். இவரது மகன் தங்கதமிழன் (வயது 25). கூலித்தொழிலாளி.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அடுத்துள்ள சிந்தாமணி கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன். இவரது மகன் தங்கதமிழன் (வயது 25). கூலித்தொழிலாளி. இவர் அப்பகுதியில் ஓட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த சோழமாதேவி கிராமத்தை சேர்ந்த வடிவேல் (34), கனகராஜ் (33), பாக்கியராஜ் (35) ஆகிய 3 பேர் சேர்ந்து குடிப்பதற்கு பணம் கேட்டு தங்கதமிழனிடம் தகராறு செய்தனர். இதில் தங்கதமிழன் பணம் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வடிவேல் உள்பட 3 பேரும் சேர்ந்து தங்கதமிழனை கத்தியால் காலில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதில் படுகாயமடைந்த தங்கதமிழனை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வடிவேல், கனகராஜ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான பாக்கியராஜை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Next Story