தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கலாசார போட்டி


தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கலாசார போட்டி
x
தினத்தந்தி 2 Aug 2018 3:30 AM IST (Updated: 2 Aug 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கலாசார போட்டிகள் நேற்று தொடங்கியது.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கலாசார போட்டிகள் நேற்று தொடங்கியது.

கலை, கலாசாரம்

தூத்துக்குடி ஜே.சி.ஐ. பியர்ல்சிட்டி அமைப்பு சார்பில் ஜே.சி.ஐ. வாரவிழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகளின் திறனை வளர்க்கும் வகையில் திறன் கலை மற்றும் கலாசார போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான போட்டிகள் தூத்துக்குடி மாநகராட்சியின் அறிஞர் அண்ணா மண்டபத்தில் நேற்று தொடங்கியது. போட்டி தொடக்க விழாவுக்கு மண்டல தலைவர் பொன்ராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கல்வி அலுவலர் வசந்தா கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

போட்டிகள்

இதில் சப்–ஜூனியர், ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் ஆகிய பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. கிரையான் கலரிங், டாட் டூ டாட், பென்சில் கலரிங், களிமண் பொருள் தயாரிப்பு, மாறுவேட போட்டிகள், தமிழ், ஆங்கில பேச்சு போட்டி, குறுநாடகம், ஊமை நாடகம், விளம்பரம் தயாரித்தல், நின்ற இடத்தில் நகைச்சுவை செய்தல், இசை, குழு நடனம், பரதநாட்டியம், மேற்கத்திய நடனம், கர்நாடக பாட்டு போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 50–க்கும் மேற்பட்ட பள்ளிகள், 15 கல்லூரிகளை சேர்ந்த மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர்.

போட்டிகளில் வெற்றி பெறும் பள்ளி, கல்லூரிக்கு கேடயம், சுழற்கோப்பையும், வெற்றி பெறும் மாணவ–மாணவிகளுக்கு கேடயம், பரிசும் வழங்கப்படுகிறது. போட்டிகள் நாளை (வெள்ளிக்கிழமை) வரை நடக்கிறது.


Next Story