அரசு மருத்துவமனைகளில் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய டாக்டர்கள்
அரசு ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம் உள்ளிட்டவற்றில் பணிபுரியும் டாக்டர்கள் 250-க்கும் மேற்பட்டோர் கோரிக்கை அட்டையை சட்டையில் அணிந்தபடி நேற்று பணியாற்றினர்.
கரூர்,
கரூர் மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்து மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழகத்திலுள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் மத்திய அரசு வழங்குவதை போன்ற ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம் உள்ளிட்டவற்றில் பணிபுரியும் டாக்டர்கள் 250-க்கும் மேற்பட்டோர் கோரிக்கை அட்டையை சட்டையில் அணிந்தபடி நேற்று பணியாற்றினர். இந்த போராட்டம் இன்றும், நாளையும் நடத்தப்படு கிறது. இது குறித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க கரூர் தலைவர் பிரபாகரன் கூறும்போது, எங்களது கோரிக்கை தொடர்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில், அனைத்து மருத்துவமனைகளிலும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகிக்கப்படும். அதன் பிறகு வருகிற 20-ந்தேதி அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகள், மருத்துவமனைகளில் தர்ணா போராட்டம் நடத்தப்படும். அதன் பின்னர் 24-ந்தேதி அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலம் நடத்தப்படும் என்று கூறினார். அப்போது செயலாளர் சிவராமன் உள்பட டாக்டர்கள் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story