எக்ஸல் கல்லூரி சார்பில் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றும் பணி
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எக்ஸல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, ரோட்ராக்ட் சங்கம் சார்பில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுதல் மற்றும் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
பல்லக்காபாளையம்,
தமிழ்நாடு முழுவதும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டினை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை ஏற்று நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எக்ஸல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, ரோட்ராக்ட் சங்கம் சார்பில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுதல் மற்றும் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக ரோட்ராக்ட் சங்கம் சார்பில் பல்லாக்காபாளையம் மேல்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளிகளில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில் மாணவர்களுக்்கு மக்கும் வகை குப்பை, மக்காத குப்பைகளை வகைப்படுத்தி பிரித்து குப்பைகளில் போடவேண்டும் என்பது குறித்த விளக்கப்படங்கள், ஒலி, ஒளி காட்சிகள். பதாகைகள் வாயிலாக பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து பள்ளி மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டன.
2-வது கட்டமாக பல்லாக்காபாளையத்தின் சுற்றுவட்டார பகுதிகளான சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பகுதிகள், ரோட்டோர பகுதிகள், தெருக்களில் இருந்த பிளாஸ்டிக் பைகள், கவர்கள் இதர கழிவுகள் சாக்குப்பைகளில் சேகரிக்கப்பட்டது. இவ்வாறு பிளாஸ்டிக் குப்பைகள் 7 சாக்குகளில் சேகரிக்கப்பட்டு, பல்லாக்காபாளையம் ஊராட்சி மன்ற அலுவலர் பிரபுவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிகழ்வுகளில் 25 மாணவர்கள் தன்னார்வத்துடன் பங்கேற்றனர். பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி, தூய்மைப்படுத்தும் பணிகளில் தன்னார்வத்துடன் ஈடுபட்ட மாணவர்களுக்கு எக்ஸல் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஏ.கே.நடேசன், துணைத்தலைவர் டாக்டர் மதன்கார்த்திக், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிப்பிரிவு இயக்குனர் சம்பத், இயக்குனர் (நிர்வாகம்) சண்முகநாதன், தொழில்நுட்ப இயக்குனர் செங்கோட்டையன், கல்லூரி முதல்வர் பழனிசாமி மற்றும் பேராசிரியர்கள், பேராசிரியைகள் பாராட்டு தெரிவித்தனர்.

Related Tags :
Next Story