சோழசூடாமணி ஆற்றில் காவிரி தண்ணீர் திறந்துவிடக்கோரி விவசாயிகள் சாலைமறியல்
கொரடாச்சேரி அருகே அரசவனங்காட்டில் சோழசூடாமணி ஆற்றில் காவிரி தண்ணீர் திறந்துவிடக்கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்தபகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொரடாச்சேரி,
காவிரி டெல்டா பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர் ஒருசில கிளை ஆறுகளில் கடைமடை பகுதி வரை வந்தடையவில்லை. அந்த வகையில் காவிரி வடிநில கோட்டத்துக்குட்பட்ட சோழசூடாமணி ஆற்றுக்கு இதுவரை தண்ணீர் வந்து சேரவில்லை. அதனால் கிளை வாய்க்காலிலும் தண்ணீர் செல்லவில்லை. ஆறு மற்றும் வாய்க்கால்களில் தண்ணீர் வராததால் குளம், குட்டைகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன. நிலத்தடி நீர்மட்டமும் குறைந்துள்ளது. பாசன வசதி கிடைக்காததால் விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளை தொடங்க முடியாமல் உள்ளனர்.
எனவே சோழசூடாமணி ஆற்றில் தண்ணீர் விட வேண்டும். திருவாரூர்-கும்பகோணம் சாலையில் அரசவனங்காடு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சாலையின் குறுக்கே வேகத்தடை அமைக்க வேண்டும். பழுதடைந்துள்ள செம்மங்குடி சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று விவசாயிகள் கொரடாச்சேரி அருகே அரசவனங்காட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் நல சங்க தலைவர் சேதுராமன், விவசாயிகள் மணியன், கலைமணி, ராமமூர்த்தி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த திருவாரூர் தாசில்தார் குணசீலி, கொரடாச்சேரி வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன், பொதுப்பணித்துறை பொறியாளர் சுப்பிரமணியன், குடவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒருவார காலத்திற்குள் அனைத்து பணிகளையும் சரி செய்து தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததின் அடிப்படையில் சாலை மறியலை கைவிட்டு விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் திருவாரூர்-கும்பகோணம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story