கருணாநிதி குணமடைய வேண்டி பள்ளி-கல்லூரி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை


கருணாநிதி குணமடைய வேண்டி பள்ளி-கல்லூரி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை
x
தினத்தந்தி 2 Aug 2018 4:00 AM IST (Updated: 2 Aug 2018 2:11 AM IST)
t-max-icont-min-icon

கருணாநிதி குணமடைய வேண்டி காட்டூரில் உள்ள அவரது தாயார் நினைவிடத்தில் பள்ளி-கல்லூரி மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர்.

கொரடாச்சேரி,

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உடல்நல குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உடல் நலம் பெற வேண்டும் என தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் கொரடாச்சேரி அருகே உள்ள காட்டூரில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகதம்மாள் நினைவிடத்தில் காட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள், அம்மையப்பன் பாரத் கல்வியியல் கல்லுாரி மற்றும் கேட்டரிங் கல்லூரி மாணவ-மாணவிகள் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நலம் பெற்று திருவாரூருக்கு வருகை தர வேண்டும் என மெழுவர்த்தி ஏந்தி முழக்கங்களை எழுப்பி மாணவ-மாணவிகள் பிராத்தனை செய்தனர்.

இந்த கூட்டு பிரார்த்தனை நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட செயலாளர் பூண்டிகலைவாணன், ஒன்றியசெயலாளர்கள் கலியபெருமாள், பாலச்சந்திரன், கல்வியியல் கல்லூரி தாளாளர் காலைக்கதிரவன், காட்டூர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பத்மாவதி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story