உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்தக்கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்


உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்தக்கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Aug 2018 4:15 AM IST (Updated: 2 Aug 2018 2:20 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்தக்கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் திட்டச்சேரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சி அருகே நகர எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நகர தலைவர் சேக்தாவூத் தலைமை தாங்கினார். நகர துணை தலைவர் நாசர் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் அபுஹாசிம் பேசினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அன்சாரி, தொழிற்சங்க மாவட்ட தலைவர் சாதிக், நாகை தெற்கு மாவட்ட செயலாளர் பாபுகான், திட்டச்சேரி வக்பு நிர்வாக சபை தலைவர் அன்தாஜ் அலி, விடுதலை சிறுத்தை கட்சியின் நகர பொறுப்பாளர் அலாவுதீன் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தியதை கண்டித்தும், உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்தக்கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் நகர செயலாளர் ஹமில் மஜித் நன்றி கூறினார்.


Next Story