உஷா இறப்பை தொடர்ந்து தமிழக போலீசார் பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறாக விமர்சித்த வாலிபர் கைது
உஷா இறப்பை தொடர்ந்து தமிழக போலீசார் பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறாக விமர்சித்த வாலிபரை, குவைத்தில் இருந்து வந்த போது திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அதிகாரிகள் மடக்கி கைது செய்தனர்.
திருச்சி,
திருச்சி மாவட்டம் துவாக்குடி சுங்கச்சாவடி அருகே கடந்த 7.3.2018 அன்று போலீசார் வாகன சோதனை செய்தனர். அப்போது தஞ்சாவூர் மாவட்டம் சூலமங்கலத்தை சேர்ந்த ராஜா தனது காதல் மனைவி உஷாவுடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். ராஜா ஹெல்மெட் அணியாமல் இருந்ததால் போலீசார் அவரை விரட்டி சென்றனர். பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் எட்டி உதைத்ததில் உஷா கீழே விழுந்து இறந்தார். இது தொடர்பாக பெரும் கலவரம் ஏற்பட்டது. உஷா சாவுக்கு காரணமான இன்ஸ்பெக்டர் காமராஜை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங் களில் போலீசாரை கண்டித்தும், அவர்களுக்கு எதிராகவும் பல்வேறு விமர்சனங்கள் வந்தன. சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள நெடுங்குளம் என்ற கிராமத்தை சேர்ந்த செல்லையா மகன் சங்கரலிங்கம் (வயது30) என்பவர் போலீசாரை தரக்குறைவாக விமர்சனம் செய்து ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு இருந்தார். இதையடுத்து திருவெறும்பூர் போலீசார், சங்கரலிங்கம் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் சங்கரலிங்கம் குவைத் நாட்டில் வேலை செய்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து சங்கரலிங்கம் பற்றிய தகவல் களை (லுக் அவுட் சர்குலர்) அனைத்து விமான நிலையங் களுக்கும் போலீசார் அனுப்பி வைத்து இருந்தனர். இந்நிலையில் சங்கரலிங்கம் நேற்று குவைத்தில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். அப்போது விமான நிலையத்தில் ஏற்கனவே பதிவு செய்து வைக்கப்பட்டிருந்த தகவல்களின் அடிப்படையில் குடியுரிமை பிரிவு அதிகாரிகள் அவரை கைது செய்து திருவனந்தபுரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த தகவல் திருச்சி மாவட்ட போலீசாருக்கும் உடனடியாக தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சங்கரலிங்கத்தை திருச்சிக்கு அழைத்து வருவதற்காக போலீசார் திருவனந்தபுரத்துக்கு விரைந்து உள்ளனர்.சங்கரலிங்கம் மீது தமிழக முதல்- அமைச்சர் பற்றி சமூக வலைத்தளத்தில் தவறான தகவல் களை வெளியிட்டதற்காக சென் னை வேப்பேரி போலீஸ் நிலையத்திலும் ஏற்கனவே ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story