தொழில் அதிபரிடம் ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டல் 3 பேர் மீது வழக்கு


தொழில் அதிபரிடம் ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டல் 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 2 Aug 2018 3:19 AM IST (Updated: 2 Aug 2018 3:19 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணிடம் செல்போனில் பேசிய ஆடியோவை காண்பித்து சேலம் தொழில் அதிபரிடம் ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டிய அ.ம.மு.க. பிரமுகர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

பெத்தநாயக்கன்பாளையம்,


இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-


சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர் பகுதியை சேர்ந்தவர் செம்மலை(வயது 50). தொழில் அதிபரான இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் இவரது செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். செம்மலையும் அவருடன் பேசினார்.

இந்த நிலையில் அந்த பெண்ணிடம் செம்மலை பேசிய செல்போன் பேச்சுகள் அடங்கிய ஆடியோவை காண்பித்து பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவரின் கணவரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் குமார் (48), சேலத்தை சேர்ந்த பாஸ்கரன், பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பழனி ஆகிய 3 பேரும் ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டி உள்ளனர்.

இதில் பயந்து போன செம்மலை குமாரிடம் முதற்கட்டமாக ரூ.38 ஆயிரம் ரொக்கமாக வழங்கி உள்ளார். பின்னர் மீதி தொகைக்கு பழனி பெயரில் வங்கி காசோலையாக வழங்கி இருக்கிறார்.

பின்னர் இது தொடர்பாக ஏத்தாப்பூர் போலீசில் செம்மலை புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன், குமார், பாஸ்கர், பழனி ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளார். போலீசார் வழக்குபதிவு செய்ததை அறிந்த 3 பேரும் தலைமறைவாகி உள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

Next Story