திருப்பூர் மாநகரில் மத்திய அதிவிரைவு படையினர் அணிவகுப்பு


திருப்பூர் மாநகரில் மத்திய அதிவிரைவு படையினர் அணிவகுப்பு
x
தினத்தந்தி 2 Aug 2018 3:45 AM IST (Updated: 2 Aug 2018 3:36 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாநகரில் நேற்று மத்திய அதிவிரைவு படையினர் சார்பில் அணிவகுப்பு நடைபெற்றது.

திருப்பூர், 

திருப்பூர் மாநகரில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் காலங்களில் பாதுகாப்பு பணியை மேற்கொள்வதற்கு முன்னோட்டமாக முக்கிய இடங்களில் நேற்று மத்திய அதிவிரைவு படையினர் அணிவகுப்பு நடத்தினார்கள். கோவை மாவட்டம் வெள்ளலூரில் இருந்து துணை கமாண்டர் ரக்‌ஷிதா தலைமையில் மத்திய அதிவிரைவு படையை சேர்ந்த 40 பேர் துப்பாக்கி ஏந்தியபடி திருப்பூரில் பெரியதோட்டம், வெங்கடேஷ்வரா நகர், திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனை, பழைய பஸ் நிலையம் பகுதியில் ரோட்டில் அணிவகுத்து சென்றனர்.

இக்கட்டான நேரத்தில் அதிவிரைவு படையினர் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நின்று பாதுகாப்பு பணியை மேற்கொள்ளும் வகையில் இந்த அணிவகுப்பு நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பூர் தெற்கு மாநகர போலீஸ் உதவி கமிஷனர் தங்கவேல், தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தென்னரசன் மற்றும் போலீசார் உடன் சென்றனர்.

Next Story