திருத்தணி முருகன் கோவில் உண்டியல் வசூல் ரூ.63½ லட்சம்
திருத்தணி முருகன் கோவிலில் கடந்த 20 நாட்களில் ரூ.63½ லட்சம் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி இருக்கிறார்கள்.
திருத்தணி,
திருத்தணி முருகன் கோவிலில் கடந்த 20 நாட்களில் உண்டியலில் பக்தர்கள் செலுத்தி இருந்த காணிக்கைகளை எண்ணும் பணி கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் நடந்தது.
கோவில் தக்கார் ஜெயசங்கர், இணை ஆணையர் சிவாஜி, உதவி ஆணையர் ஜான்சிராணி மற்றும் அதிகாரிகள் மேற்பார்வையில் கோவில் மற்றும் வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டு காணிக்கைகளை எண்ணினார்கள்.
இதில் ரூ.63 லட்சத்து 46 ஆயிரத்து 391 மற்றும் 291 கிராம் தங்கம், 5 கிலோ 420 கிராம் வெள்ளி ஆகியவற்றையும் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி இருந்தார்கள்.
Related Tags :
Next Story