டோம்பிவிலியில் வயதான தம்பதி ரெயிலில் அடிபட்டு சாவு தற்கொலையா? போலீஸ் விசாரணை
டோம்பிவிலியில் வயதான தம்பதி ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தனர். அவர்கள் தற்கொலை செய்து கொண்டனரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்பர்நாத்,
டோம்பிவிலியில் வயதான தம்பதி ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தனர். அவர்கள் தற்கொலை செய்து கொண்டனரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரெயிலில் அடிபட்டு சாவு
மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் உள்ள டோம்பிவிலி ரெயில் நிலையத்தில் நேற்றுமுன்தினம் மாலை முதியவர் ஒருவரும், ஒரு மூதாட்டியும் ரெயிலில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் ரெயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தனர். ரெயில்வே போலீசார் இருவரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்களது உடல்களை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் அவர்கள் டோம்பிவிலியை சேர்ந்த விஜய் பவாஸ்கர்(வயது72), அவரது மனைவி சவிதா(69) என்பது தெரியவந்தது.
தற்கொலையா?
இதையடுத்து ரெயில்வே போலீசார் ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்வையிட்டனர். இதில் தம்பதி இருவரும் வெகுநேரமாக பிளாட்பாரத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்து இருந்ததும், 2 முறை தண்டவாளத்தில் இறங்க முயற்சி செய்த காட்சியும் பதிவாகி இருந்தது. 3-வது முறையாக தண்டவாளத்தில் இறங்கிய போது இருவரும் ரெயிலில் அடிபட்டு உள்ளனர்.
எனவே அவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story