திருவள்ளூரில் வேளாண் கண்காட்சி


திருவள்ளூரில் வேளாண் கண்காட்சி
x
தினத்தந்தி 2 Aug 2018 4:10 AM IST (Updated: 2 Aug 2018 4:10 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் வேளாண் கண்காட்சி நடந்தது.

திருவள்ளூர், 

திருவள்ளூரில் வேளாண் கண்காட்சியை வேளாண்துறையின் இணை இயக்குனர் பாண்டியன் தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றியும், ரிப்பன் வெட்டியும் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கால்நடை உற்பத்தி மேலாண்மைத்துறை பேராசிரியர் மீனாட்சிசுந்தரம், வி.ஜி.அக்ரோ சர்வீஸ் நிர்வாகி பிரான்சிஸ், டெபன் அக்ரோ நிர்வாகி முத்து கிருஷ்ணன், அப்னா டிரேட் பேர்ஸ் இயக்குனர் சிவா இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த வேளாண் கண்காட்சியில் டிராக்டர், நெல் அறுவடை எந்திரம், பவர்டில்லர், கால்நடைகளுக்கு தேவையான அனைத்து உபகரணங்கள், பண்ணைக்கருவிகள், தோட்டக்கலை தொழில் நுட்பம், நீர்பாசனம் என வேளாண் சம்பந்தப்பட்ட 80 அரங்குகள் தனித்தனியாக அமைக்கப்பட்டிருந்தது.

இதனை விவசாயிகள் கண்டுகளித்தனர். இந்த வேளாண் கண்காட்சியானது வருகிற 4-ந் தேதி வரை தொடர்ந்து நடைபெறும். 

Next Story