ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
திருச்சி,
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம். இந்த மாதத்தில் வெள்ளிக்கிழமை தோறும் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜை நடப்பது உண்டு. இன்று (வெள்ளிக்கிழமை) ஆடி 18 என்னும் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் காவிரி ஆறு நுழையும் ஒகேனக்கல் முதல் கடலில் சங்கமிக்கும் பூம்புகார் வரை காவிரி கரையோரங்களில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது.
திருச்சி காவிரி ஆற்றில் 5 ஆண்டுகளுக்கு பின்னர், அகண்ட காவிரியின் இரு கரைகளையும் தொட்டபடி கடந்த சில நாட்களாக தண்ணீர் பாய்ந்தோடி வருகிறது. இதனால், திருச்சி மாவட்ட மக்கள் ஆடிப்பெருக்கை உவகையுடன் கொண்டாட மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
திருச்சி அம்மாமண்டபம் படித்துறை, காவிரி கரையோர பகுதிகளான கருட மண்டபம், கீதாபுரம், ஓடத்துறை, அய்யாளம்மன் படித்துறை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் வாழை இலை விரித்து, பழம் உள்ளிட்ட மங்கல பொருட்களை படையலிட்டு பூஜை செய்வார்கள். காவிரி ஆற்றுக்கும் தீபாராதனை காட்டி வழிபட்டு நன்றி தெரிவிப்பது வழக்கம். மேலும் சுமங்கலி பெண்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டி கொள்வார்கள். திருமணமாகாத இளம்பெண்கள் கையில் மஞ்சள் கயிறுகட்டி வேண்டி கொள்வர்.
ஆடிப்பெருக்கு விழாவை திருச்சி மாவட்ட மக்கள் அனைவரும் கொண்டாடும் வகையில் இன்று (வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர் ராஜாமணி உத்தரவிட்டுள்ளார். அதையொட்டி, திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த விடுமுறைக்கு பதிலாக வருகிற 18-ந் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என்றும் கலெக்டர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story