அதிக குழந்தைகளை ஏற்றிச்சென்ற 8 கார்கள் பறிமுதல் வட்டார போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை


அதிக குழந்தைகளை ஏற்றிச்சென்ற 8 கார்கள் பறிமுதல் வட்டார போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை
x
தினத்தந்தி 3 Aug 2018 3:30 AM IST (Updated: 3 Aug 2018 12:36 AM IST)
t-max-icont-min-icon

அதிக குழந்தைகளை ஏற்றிச்சென்ற 8 கார்களை பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை எடுத்தார்.

கடத்தூர்,

கோபி வட்டார போக்குவரத்து அதிகாரி பழனிவேலு தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் அதிகாரிகள் கோபி, மாக்கினாங்கோம்பை அரசூர், காசிபாளையம் ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் 8 கார்களில் அளவுக்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றிவந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அந்த கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இயங்கிய 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட 10 வாகனங்களும் கோபி வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து போக்குவரத்து அதிகாரி பழனிவேலு கூறுகையில், ‘கார் மற்றும் ஆட்டோக்களில் பள்ளிக்கூட குழந்தைகளை அதிக எண்ணிக்கையில் ஏற்றிச்சென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும். மேலும் தற்போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்.

Next Story