திசையன்விளை புதிய தாலுகா உதயம் தாசில்தாராக தாஸ்பிரியன் நியமனம்


திசையன்விளை புதிய தாலுகா உதயம் தாசில்தாராக தாஸ்பிரியன் நியமனம்
x
தினத்தந்தி 3 Aug 2018 3:00 AM IST (Updated: 3 Aug 2018 12:39 AM IST)
t-max-icont-min-icon

திசையன்விளையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உதயம் ஆகியுள்ளது. தாசில்தாராக தாஸ்பிரியன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

திசையன்விளை,

திசையன்விளையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உதயம் ஆகியுள்ளது. தாசில்தாராக தாஸ்பிரியன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

திசையன்விளை தாலுகா

நெல்லை மாவட்டத்தில் உள்ள ராதாபுரம், நாங்குநேரி தாலுகாக்களை பிரித்து, திசையன்விளையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. திசையன்விளை புதிய தாலுகா வருகிற 25–ந்தேதியில் இருந்து செயல்படும் என்றும், திசையன்விளை குறுவட்டத்துக்கு உட்பட்ட திசையன்விளை, அப்புவிளை, முதுமொத்தான்மொழி, உறுமன்குளம், கரைச்சுத்துபுதூர், குட்டம், குமாரபுரம், கரைச்சுத்துஉவரி, கோட்டைக்கருங்குளம் பகுதி–1, கோட்டைக்கருங்குளம் பகுதி–2, கஸ்தூரிரெங்கபுரம் பகுதி–1, கஸ்தூரிரெங்கபுரம் பகுதி–2, விஜயநாராயணம் குறுவட்டத்துக்கு உட்பட்ட சடையனேரி, விஜயநாராயணம் பகுதி–1, விஜயநாராயணம் பகுதி–2, விஜநாராயணம் பகுதி–3, விஜயநாராயணம் பகுதி–4, இட்டமொழி, ராமகிருஷ்ணாபுரம், கோவன்குளம், கண்ணநல்லூர் ஆகிய கிராமங்களை தனது ஆட்சி எல்லையாக கொண்டு செயல்படும் என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது.

திசையன்விளை தாலுகாவில் உள்ளடங்கும் திசையன்விளை, விஜயநாராயணம் ஆகிய குறுவட்டங்கள் மீது தற்போது ராதாபுரம், நாங்குநேரி தாசில்தார்களால் கையாளப்படும் அதிகாரங்கள் வருகிற 25–ந்தேதியில் இருந்து திசையன்விளை தாசில்தாரால் கையாளப்படும் என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது.

தாசில்தார் நியமனம்

புதிதாக உதயம் ஆகியுள்ள திசையன்விளை தாலுகா தாசில்தாராக, சங்கரன்கோவில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தாஸ்பிரியன் நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும் அவருக்கு திசையன்விளை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிறப்பித்து உள்ளார்.


Next Story