கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு: சாலையில் தண்ணீர் வீணாக வெளியேறும் அவலம்


கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு: சாலையில் தண்ணீர் வீணாக வெளியேறும் அவலம்
x
தினத்தந்தி 3 Aug 2018 4:00 AM IST (Updated: 3 Aug 2018 12:40 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் வீணாக வெளியேறும் அவலம் உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாய்மேடு,

நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த தகட்டூரில் ஆதியன்காடு கிராமம் உள்ளது. இந்தபகுதியில் வசிக்கும் மக்கள் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பயனடைந்து வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 15 நாட்களாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் இயங்கும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, சாலையில் தண்ணீர் வீணாக வெளியேறும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் இல்லாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாலையில் தண்ணீர் வீணாக வெளியேறுவதால் வாய்மேடு, தகட்டூர், மருதூர், தென்னடார் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே உடைப்பு ஏற்பட்டுள்ள குழாயை உடனே சீரமைத்து விரைவில் குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story