பஸ் பாஸ் உடனடியாக வழங்கக்கோரி திரு.வி.க. அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


பஸ் பாஸ் உடனடியாக வழங்கக்கோரி திரு.வி.க. அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Aug 2018 4:15 AM IST (Updated: 3 Aug 2018 1:01 AM IST)
t-max-icont-min-icon

பஸ் பாஸ் உடனடியாக வழங்கக்கோரி திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

திருவாரூர் கிடாரங் கொண்டானில் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் நடப்பு ஆண்டு பாட வகுப்புகள் தொடங்கி 2 மாதங்களாக நடைபெற்று வருகிறது. ஆனால் இதுவரை மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்கப்படாமல் உள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் ஏழை, எளிய மாணவர்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். இதனால் படிப்பு பாதிக்கப்படுகிறது. எனவே பஸ் பாஸ் காலம் கடத்தாமல் வழங்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனை தொடர்ந்து பஸ் பாஸ் வழங்கக்கோரி திருவாரூர் திரு.வி.க. கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க கல்லூரி கிளை தலைவர் சிவபாலன் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் ஜோஸ்வா முன்னிலை வகித்தார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் பிரகாஷ் கலந்து கொண்டு பேசினார். அப்போது குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர். 

Next Story