தூய்மை கணக்கெடுப்பு விழிப்புணர்வு வாகனம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்

தூய்மை கணக்கெடுப்பு விழிப்புணர்வு வாகனம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 3 Aug 2018 3:00 AM IST (Updated: 3 Aug 2018 1:15 AM IST)
t-max-icont-min-icon

தூய்மை பாரத இயக்கத்தின் தூய்மை கணக்கெடுப்பு ஊரகம்– 2018 விழிப்புணர்வு பணிகளுக்கு ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் தயார் செய்யப்பட்ட விழிப்புணர்வு வாகனம் பணிகள் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

தூத்துக்குடி,

தூய்மை பாரத இயக்கத்தின் தூய்மை கணக்கெடுப்பு ஊரகம்– 2018 விழிப்புணர்வு பணிகளுக்கு ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் தயார் செய்யப்பட்ட விழிப்புணர்வு வாகனம் பணிகள் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. 

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், உதவி கலெக்டர் (பயிற்சி) அனு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, மகளிர் திட்ட இயக்குனர் ரேவதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) பாலசுப்பிரமணியன், உதவி இயக்குனர் (தணிக்கை) ஜஸ்டின் அந்தோணி மைக்கேல், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் முத்துலட்சுமி, ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் விநாயக சுப்பிரமணியன், காமராஜ் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் தேவராஜ், பொன்னுத்தாய், கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Next Story