மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Aug 2018 3:00 AM IST (Updated: 3 Aug 2018 2:20 AM IST)
t-max-icont-min-icon

8 வழிச்சாலை அமைக் கும் திட்டத்தை நிறை வேற்றக்கூடாது என்று நடைபயணம் மேற் கொண்ட போது கைதான வர்களை விடுவிக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தேனியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். கம்பத்தில் அனுமதியின்றி ஊர்வல மாக செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி,



சேலத்தில் இருந்து சென்னைக்கு 8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை நிறைவேற்றக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து நடை பயணம் மேற்கொண்ட மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் உள்பட நிர்வாகி கள் பலர் கைது செய்யப் பட்டனர். அவர்களை விடுதலை செய்யக்கோரி தேனி அல்லிநகரத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு மாவட்ட செய லாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் ராஜப்பன், சங்கர சுப்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். போடி தாலுகா செயலாளர் செல்வம், பெரிய குளம் தாலுகா செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப் பாட்டத்தின் போது தமிழக அரசை கண்டித்தும், நடை பயணம் செல்ல முயன்றதால் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.

இதே போல் கம்பத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காந்தி சிலை யிலிருந்து அரசமரம், போக்கு வரத்து சிக்னல் வழியாக ஊர்வலமாக சென்று ஏ.கே.ஜி. திடலில் ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் காந்தி சிலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்களை உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு சீமைச் சாமி தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி னர். அப்போது போலீசாருக் கும், அவர்களுக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது.

அதில் சிலர் அங்கு இருந்து ஓடினர். பின்னர் அவர்கள் கம்பம்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசையும், போலீ சாரையும் கண்டித்து கோஷ மிட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப் பட்டது. உடனே அவர்களை வலுக்கட்டாயமாக போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மறியலில் ஈடுபட்டது தொடர்பாக கட்சியின் பகுதி செயலாளர் நாகராஜ் தலைமையில் மாவட்டக் குழு உறுப்பினர்கள் விஜயா, லெனின், ஜெயராஜ், பன்னீர் வேல் உள்பட 26 பேரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்களை வேனில் ஏற்றி கம்பத்தில் உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்பு அவர்கள் அனை வரையும் இரவு போலீசார் விடுவித்த னர். 

Next Story