பாசன வாய்க்கால்களை தூர்வாரக்கோரி பாபநாசத்தில், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


பாசன வாய்க்கால்களை தூர்வாரக்கோரி பாபநாசத்தில், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Aug 2018 4:15 AM IST (Updated: 3 Aug 2018 3:19 AM IST)
t-max-icont-min-icon

பாசன வாய்க்கால்களை தூர்வாரக்கோரி பாபநாசத்தில், விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாபநாசம்,

பாசன வாய்க்கால்களை முழுமையாக தூர்வார வேண்டும். கடைமடை வரை தண்ணீர் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு மானிய விலையில் விதை நெல், உரம் வழங்க வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். நுகர் பொருள் வாணிப கழகத்தின் நேரடி கொள்முதல் நிலையங்களில் சாக்கு தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி டெல்டாவை வேளாண்மை பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து, கச்சா எண்ணெய் நிறுவனங்களை வெளியேற்ற வேண்டும், கூட்டுறவு சங்கங்கள் மூலம் சிறு, குறு மற்றும் தினக்கூலி விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் மானியத்துடன் கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் பாபநாசம் புதிய பஸ் நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பெருமாள், மாவட்ட தலைவர் இளங்கோவன், பாபநாசம் ஒன்றிய செயலாளர் அன்பழகன், பாபநாசம் ஒன்றிய தலைவர் ஜெயராமன், பாபநாசம் ஒன்றிய இணை செயலாளர் மாரிமுத்து, மகளிர் அணி தலைவி அன்புசெல்வி, மாநில செயலாளர் காளிதாஸ், சங்க ஆலோசகர் பெல்மகாலிங்கம் மற்றும் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். 

Next Story