புதுச்சேரி - கடலூர் இடையே பேட்டரியில் இயங்கும் ஏ.சி. பஸ் சோதனை ஓட்டம்


புதுச்சேரி - கடலூர் இடையே பேட்டரியில் இயங்கும் ஏ.சி. பஸ் சோதனை ஓட்டம்
x
தினத்தந்தி 3 Aug 2018 3:48 AM IST (Updated: 3 Aug 2018 3:48 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி - கடலூர் இடையே பேட்டரியில் இயங்கும் ஏ.சி. பஸ் சோதனை ஓட்டம் அமைச்சர் ஷாஜகான் தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி,

புதுவை அரசு சாலை போக்குவரத்து கழகம் (பி.ஆர்.டி.சி.) சார்பில் பேட்டரி மூலமாக இயங்கும் ஏ.சி. பஸ் புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. போக்குவரத்து துறை அமைச்சர் ஷாஜகான், எம்.எல்.ஏ.க்கள் சிவா, தனவேலு, போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார், பி.ஆர்.டி.சி. மேலாண் இயக்குனர் குமார், பொதுமேலாளர் ஏழுமலை ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இதுபற்றி அமைச்சர் ஷாஜகான் கூறுகையில், பேட்டரியால் இயங்கும் இந்த ஏ.சி. பஸ் சீனாவின் தயாரிப்பாகும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிலோ மீட்டர் வரை பயணம் செல்லலாம். இதன் மதிப்பு ரூ.2½ கோடி. இந்த பஸ் புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு சோதனை முறையில் இயக்கப்படுகிறது. இந்த சோதனை ஓட்டம் முடிந்த பிறகு பஸ்சை வாங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும். இந்த பேட்டரி பஸ்சினால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாது என்பதால் மக்களிடம் வரவேற்பு இருக்கும். புதுச்சேரி - கடலூருக்கு டிக்கெட் கட்டணமாக ரூ.35 வசூலிக்கப்படுகிறது என்றார்.

Next Story