சேலத்தில் வீடு புகுந்து நகை திருடிய சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது


சேலத்தில் வீடு புகுந்து நகை திருடிய சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 3 Aug 2018 5:06 AM IST (Updated: 3 Aug 2018 5:06 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் வீடு புகுந்து நகை திருடிய சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்,

சேலம் எருமாபாளையம் பனங்காடு பகுதியை சேர்ந்தவர் கவுதமன்(வயது 34). இவர் ஆடிட்டர் ஒருவருடைய அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் 27-ந் தேதி கவுதமன் ராமானுஜர் தெருவில் வசித்து வந்த தன்னுடைய பாட்டி இறந்ததையொட்டி அங்கு சென்றார். பின்னர் அவர் இரவு 11 மணி அளவில் வீடு திரும்பினார்.

அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 8 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிய மர்ம ஆசாமிகளை தேடி வந்தார்.

4 பேர் கைது

இந்தநிலையில் கவுதமன் வீட்டுக்குள் புகுந்து நகை திருடியதாக அன்னதானப்பட்டி சண்முகா நகரை சேர்ந்த சிவா (23) மற்றும் 16 வயதுக்குட்பட்ட 3 சிறுவர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 பவுன் நகை மீட்கப்பட்டது. 

Next Story