திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் தீ விபத்து
திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.
ஏ.சி. எந்திரத்தில் தீப்பிடித்தது
திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் கண் அறுவைசிகிச்சை அரங்கு உள்ளது. நேற்று காலை 10.45 மணியளவில் அந்த அரங்கில் உள்ள ஏ.சி. எந்திரத்தில் மின்கசிவு காரணமாக திடீரென்று தீப்பிடித்து கரும்புகை வெளியேறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவ ஊழியர்கள், அந்த அறையின் மின்இணைப்பை துண்டித்தனர். இதுகுறித்து திருச்செந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே தீயணைப்பு நிலைய அலுவலர் சண்முகம் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். தீவிபத்து நடந்தபோது, கண் அறுவைசிகிச்சை அரங்கில் யாரும் இல்லாததால், பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
எம்.எல்.ஏ. ஆய்வு
தீவிபத்தில் ஏ.சி. எந்திரம், அறுவைசிகிச்சை உபகரணங்கள் எரிந்து சேதம் அடைந்தன. அவற்றின் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் ஆகும். தீவிபத்தால் கண் அறுவைசிகிச்சை அரங்கு முழுவதும் கரும்புகை படிந்து இருந்தது.
தீவிபத்து நடந்த இடத்தை அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பார்வையிட்டார். தி.மு.க. ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், நகர செயலாளர் வாள் சுடலை மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story