100 நாள் வேலை திட்டத்தில் கண்மாய் வரத்துக்கால்வாய் சீரமைப்பு பணி கலெக்டர் ஆய்வு


100 நாள் வேலை திட்டத்தில் கண்மாய் வரத்துக்கால்வாய் சீரமைப்பு பணி கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 4 Aug 2018 3:45 AM IST (Updated: 4 Aug 2018 12:40 AM IST)
t-max-icont-min-icon

சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் கண்மாய் வரத்துக்கால்வாய் சீரமைப்பு பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காரைக்குடி,

சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் பணிகளை கலெக்டர் லதா நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அமராவதிபுதூரில் உள்ள மீனாவயல் கண்மாய் வரத்துக்கால்வாயில் ரூ.4¼ லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வரத்துக்கால்வாய் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் கலெக்டர் கூறும்போது, திட்டமிட்ட பணிகளை விரைந்து முடித்திடவும், கண்மாய் கரைகளின் இருபுறமும் பலப்படுத்தப்படுத்திடவும், மழைக்காலம் வரும்முன்பு கண்மாய்க்கு தண்ணீர் வரும் வரத்துக்கால்வாய்களை தாழ்வாக சீரமைத்து, மழைநீர் கண்மாயில் வந்தடையும் வண்ணம் பணி மேற்கொள்ள வேண்டும். உதவி பொறியாளர் மற்றும் அலுவலர்கள் பணி நடைபெறும்போது கண்காணித்து பணியாளர்களுக்கு தக்க அறிவுரைகளை வழங்கி பணிகள் சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.


Next Story