பஞ்சுவிலை அதிகரித்த போதும் நூல்விலை உயர்த்தப்படாததால் தொழில்துறையினர் மகிழ்ச்சி


பஞ்சுவிலை அதிகரித்த போதும் நூல்விலை உயர்த்தப்படாததால் தொழில்துறையினர் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 4 Aug 2018 4:30 AM IST (Updated: 4 Aug 2018 1:39 AM IST)
t-max-icont-min-icon

பஞ்சுவிலை அதிகரித்த போது நூல்விலை உயர்த்தப்படாததால் தொழில்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பூர்,

திருப்பூர் பின்னலாடை தயாரிப்பில் பருத்தி பஞ்சில் இருந்து தயாரிக்கப்படும் நூல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகிறது. இந்த நிலையில் நூல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாந்தந்தோறும் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே ஜி.எஸ்.டி. உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் தொழில் துறையினர் கடும் சிரமத்தை சந்தித்து வரும் நிலையில், உயர்ந்து வரும் நூல் விலை தொழில்துறையினரை கவலையடைய செய்துள்ளது. ஆனால் தற்போது பஞ்சுவிலை அதிகரித்துள்ள போதும், நூல் விலையை நூற்பாலையினர் அதிகரிக்காமல் இருப்பது தொழில்துறையினரை மகிழ்ச்சி அடையை செய்துள்ளது.

இதுகுறித்து ஆடை தயாரிப்பாளர்கள் கூறியதாவது:–

நடப்பு சீசன் தொடக்கத்தில் ஒரு கேண்டி (355.62 கிலோ) பருத்தி பஞ்சு கொள்முதல் விலை ரூ.40 ஆயிரமாக இருந்தது. சீசன் நிறைவடைந்துள்ள நிலையில் பஞ்சு விலை அபரிமிதமாக உயர்ந்து வருகிறது. பஞ்சு விலை உயர்வால் தமிழக நூற்பாலைகளின் உற்பத்தி செலவினமும் பல மடங்கு அதிகரித்துள்ளது. மூலப்பொருட்கள் விலை உயர்வுக்கு ஏற்ப நூல் விலையையும், நூற்பாலைகள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஜனவரி மாதம் கிலோவுக்கு ரூ.12, ஜூன் 1–ல் ரூ.15 என உயர்த்தப்பட்டது. பஞ்சு விலை கேண்டி ஒன்று ரூ.48 ஆயிரத்து 500–ஐ எட்டியதால் கடந்த ஜூலை 2–ந்தேதி நூல் விலை கிலோவுக்கு ரூ.7 உயர்த்தப்பட்டது.

பஞ்சுவிலையை ஒப்பிடும் போது நூல் விலை கிலோவுக்கு ரூ.7 உயர்த்தப்பட்டது. பஞ்சு விலையை ஒப்பிடும் போது நூல் விலை கிலோவுக்கு ரூ.7 வரை குறைவாக உள்ளதால் ஆகஸ்டு 1–ந்தேதியில் நூல் விலை மேலும் உயர்த்தப்படும் என பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பஞ்சுவிலை கேண்டிக்கு ரூ.500 உயர்ந்து ரூ.49 ஆயிரத்தை எட்டியுள்ளது. ஆனாலும் நூற்பாலைகள் நூல் விலையை உயர்த்தவில்லை. கடந்த மாதத்தின் விலையே தொடரும் என நூற்பாலைகள் அறிவித்துள்ளன. இது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதுகுறித்து நூற்பாலை துறையினர் கூறியதாவது, பருத்தி பஞ்சுவிலை அபரிமிதமாக உயர்ந்துள்ளது. பஞ்சு விலை உயர்வுக்கு ஏற்ப நூல் விலையை உயர்த்த முடிவதில்லை. ஆடை உற்பத்தி துறையும் பாதிக்கப்படும். எனவே நூல் விலை தற்போது உயர்த்தப்படவில்லை. ஆனால் தொடர்ந்து இதே நிலை நீடிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது என்று கூறினார்.


Next Story