தேசிய எலும்பு மற்றும் மூட்டு வாரம்: கீழ்ப்பாக்கம் அரசு டாக்டர்கள், நர்சுகள் விழிப்புணர்வு பேரணி


தேசிய எலும்பு மற்றும் மூட்டு வாரம்: கீழ்ப்பாக்கம் அரசு டாக்டர்கள், நர்சுகள் விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 4 Aug 2018 2:09 AM IST (Updated: 4 Aug 2018 2:09 AM IST)
t-max-icont-min-icon

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் சார்பில், சாலை விதிகளை கடைபிடிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

சென்னை, 

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தேசிய எலும்பு மற்றும் மூட்டு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மருத்துவமனையின் சார்பில், சாலை விதிகளை கடைபிடித்து விபத்துகளை குறைப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி மற்றும் மனிதசங்கிலி நேற்று நடத்தப்பட்டது.

இதற்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் வசந்தாமணி தலைமை தாங்கினார். டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவ மாணவர்கள் இதில் பங்கேற்றனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணி சேத்துப்பட்டு பசுமை பூங்கா வரை வந்து நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்ற அனைவரும் ‘மிதவேகத்தில் செல்வோம் விபத்தை குறைப்போம்’ என்ற முழங்கியபடி வந்தனர்.

அதனை தொடர்ந்து சேத்துப்பட்டு பசுமை பூங்கா அருகே சாலையோரத்தில் டாக்டர்கள் நர்சுகள் மற்றும் மாணவர்கள் வரிசையாக நின்று மனித சங்கலி அமைத்தனர். அப்போது சாலையில் வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களுக்கு சாலை விதிமுறைகளை கடைபிடித்து, விபத்துகளை குறைப்பது குறித்த துண்டு பிரசுரங்களை அவர்கள் வழங்கினர். 

Next Story