கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு: போலீஸ்காரரின் மனைவி தற்கொலை முயற்சி


கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு: போலீஸ்காரரின் மனைவி தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 4 Aug 2018 4:45 AM IST (Updated: 4 Aug 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பதை அறிந்த போலீஸ்காரரின் மனைவி தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார்.

பெரம்பூர்,

சென்னை கொண்டித்தோப்பு போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் சார்லஸ்(வயது 31). இவர், கொருக்குப்பேட்டை போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீஸ்காரராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுமதி(30). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

போலீஸ்காரர் சார்லசுக்கும், தண்டையார்பேட்டையை சேர்ந்த 33 வயது திருமணமான பெண் ஒருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முகநூல் மூலம் அறிமுகம் ஏற்பட்டு, இருவரும் பழகி வந்தனர். அவருக்கு ஒரு குழந்தை உள்ளது. கருத்துவேறுபாடு காரணமாக அவர், தனது கணவரை விட்டு பிரிந்து குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார்.

போலீஸ்காரர் சார்லசுக்கும், அந்த இளம்பெண்ணுக்கும் முகநூலில் ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

இதை அறிந்து மனம் உடைந்த சுமதி, நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் இருந்த தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக தின்று தற்கொலைக்கு முயன்றார்.

நேற்று காலை வெகுநேரமாகியும் சுமதி வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு சுமதி மயங்கி கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிசிச்சை அளித்து வருகின்றனர்.

இது தொடர்பாக வடசென்னை போலீஸ் இணை கமிஷனர் சந்தோஷ்குமார் ஜோசியிடம் தனது கணவர் மீது சுமதி ஏற்கனவே புகார் செய்து இருந்தார். அதன்பேரில் தண்டையார்பேட்டை உதவி கமிஷனர் முத்துகுமார் தலைமையில் கொருக்குபேட்டை போலீசார் சார்லசிடம் விசாரித்தனர்.

ரூ.15 லட்சம் பறிப்பு

அப்போது போலீஸ்காரர் சார்லஸ் கூறும்போது, நான் அந்த பெண்ணுடன் நட்பாக பழகினேன். அதை வைத்து அந்த பெண்ணும், அவருடைய தம்பி சந்தோஷ் (29) என்பவரும் சிறிது சிறிதாக என்னிடம் பணம் பறித்தனர். வீடு கட்டுவதாக கூறி சுமார் ரூ.15 லட்சம் வரை என்னிடம் பெற்றுக்கொண்டு மேலும் பணம் கேட்டனர். இதனால் அந்த பெண்ணுடனான நட்பை துண்டிக்க நினைத்து அவரை சந்திப்பதை தவிர்த்தேன்.

இதில் ஆத்திரம் அடைந்த அந்த பெண், என் மனைவி சுமதியிடம் தகாத வார்த்தையில் பேசி சத்தம் போட்டதால் மனவேதனையில் எனது மனைவி தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார் என கூறியதாக தெரிகிறது.

இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 

Next Story