ஐரோலியில் நடுரோட்டில் லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு கன்சோலியில் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு


ஐரோலியில் நடுரோட்டில் லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு கன்சோலியில் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 4 Aug 2018 5:45 AM IST (Updated: 4 Aug 2018 3:25 AM IST)
t-max-icont-min-icon

ஐரோலியில் நடுரோட்டில் லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கன்சோலியில் லாரி கவிழ்ந்ததால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

மும்பை, 

ஐரோலியில் நடுரோட்டில் லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கன்சோலியில் லாரி கவிழ்ந்ததால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

தீப்பிடித்து எரிந்த லாரி

தானே மாவட்டம் பிவண்டியில் இருந்து சாங்கிலிக்கு நேற்று முன் தினம் இரவு லாரி ஒன்று ஐஸ்கிரீம் டின்களுடன் புறப்பட்டு சென்றது. இரவு 10 மணியளவில் ஐரோலி பகுதியில் வந்து கொண்டிருந்த போது, லாரி திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. டிரைவர் உடனடியாக லாரியில் இருந்து வெளியே குதித்து உயிர்தப்பினார். இந்த நிலையில் லாரி முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விபத்தில் லாரியில் இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான சரக்குகள் தீயில் எரிந்தன. இந்த விபத்தால் நேற்று முன்தினம் இரவு தானே- பேலாப்பூர் சாலை யில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

லாரி கவிழ்ந்து விபத்து

நவிமும்பையில் இருந்து நேற்று காலை தானேக்கு சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது. காலை 6.15 மணியளவில் தானே- பேலாப்பூர் ரோட்டில் கன்சோலி ரெயில் நிலையம் அருகே சென்ற போது, லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்தது. இதனால் அந்த ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் பல கி.மீ. தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. இந்த விபத்தில் லாரி டிரைவர் லேசான காயங் களுடன் உயிர்தப்பினார். தகவல் அறிந்து சென்ற போலீசார் கவிழ்ந்த லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் நேற்று காலை நவிமும்பையில் இருந்து தானே நோக்கி சென்றவர்கள் கடும் அவதி அடைந்தனர்.

2 விபத்துகள் குறித்தும் நவிமும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story