பணம் சம்பாதிப்பதற்காக மனைவியை விபசாரத்தில் தள்ளிய வாலிபர் கைது
மனைவியை விபசாரத் தில் தள்ளி பணம் சம்பாதித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
மனைவியை விபசாரத் தில் தள்ளி பணம் சம்பா தித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
விபசாரத்தில் தள்ளப்பட்ட இளம்பெண்
தானே மாவட்டம் மிராரோட்டில் 19 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த இளம் பெண்ணை அவரது 26 வயது கணவர் தனது நண்பர் உள்பட 2 பேருடன் சேர்ந்து விபசாரத்தில் தள்ளி பணம் சம்பாதித்து வந்துள்ளார்.
அவர்கள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இளம்பெண்ணை கொல் கத்தா, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு அழைத்து சென்று பலருக்கு விருந்தாக்கி உள்ளனர்.
3 பேர் கைது
இதில், இளம்பெண் கர்ப்பமாகி கரு கலைப்பும் செய்யப்பட்டு இருக்கிறார். ஒரு கட்டத்தில் அவர்களின் தொல்லையை தாங்க முடியா மல் தவித்த இளம்பெண், மிராரோடு போலீஸ் நிலையத் தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணின் கணவர், அவரது 28 வயது நண்பர் மற்றும் விபசார தரகர் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
கணவரே மனைவியை விபசாரத்தில் தள்ளி பணம் சம்பாதித்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story