சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்காக ஜருகுமலையை குடைந்து குகைப்பாதை அமைக்க முடிவு
சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்காக ஜருகுமலையை குடைந்து குகைப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மண் மாதிரி சேகரிக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பனமரத்துப்பட்டி,
சேலம்-சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 8 வழி பசுமைச்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை சேலம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 36 கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சேலத்தில் அரியானூர், பாரப்பட்டி, நாழிக்கல்பட்டி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி, நிலவாரப்பட்டி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் நில அளவீடு செய்து எல்லைக் கற்களை நடும் பணியை அதிகாரிகள் நடத்தி முடித்துள்ளனர். மேலும் அந்த நிலங்களில் உள்ள வீடுகள், கட்டிடங்கள், மரங்கள் ஆகியவற்றை கணக்கெடுக்கும் பணியையும் அவர்கள் முடித்துள்ளனர்.
இந்த நிலையில் சேலம் நிலவாரப்பட்டி அருகே உள்ள ஜருகுமலை அடிவாரப்பகுதியில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த சாலை அமைய உள்ளது. இதனால் அந்த பகுதியில் மலையை குடைந்து குகைப்பாதை அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து 8 வழிச்சாலைக்காக நியமிக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
ஊத்துமலை, ஜருகுமலை ஆகிய 2 மலை பகுதிகளுக்கு இடையே மூலக்காடு பகுதி வருகிறது. புதிய சாலைக்காக மலைகள் அழிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த பகுதியில் மலைகளை குடைந்து குகைப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக இந்த மலைப்பகுதியில் உள்ள மண் மற்றும் பாறைகளின் உறுதி தன்மைகள் குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் இதற்காக சிறப்பு நிபுணர் வரவழைக்கப்பட்டு கடந்த சில நாட்களாக நவீன எந்திரங்கள் மூலம் மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் சுமார் 100 முதல் 150 அடி ஆழம் வரை துளையிடப்பட்டு அங்குள்ள மண் மாதிரிகள் மற்றும் பாறை துகள்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. இந்த மாதிரிகள் அனைத்தும் பெங்களூருவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு பரிசோதனை செய்யப்பட்ட பின் பாறை மற்றும் மண்ணின் தன்மை வலுவாக இருந்தால் இந்த பகுதியில் குகைப்பாதை அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story