தீரன் சின்னமலை நினைவுதினம்: சங்ககிரி மலைக்கோட்டை, நினைவிடத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அஞ்சலி
தீரன் சின்னமலை நினைவுதினத்தையொட்டி சங்ககிரி மலைக்கோட்டை, நினைவிடத்தில் அமைச்சர்கள் பி.தங்கமணி, அன்பழகன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அஞ்சலி செலுத்தினர்.
சங்ககிரி,
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சேலம் மாவட்டம், சங்ககிரி மலைக்கோட்டை நுழைவு வாயில் மற்றும் ஈரோடு பிரிவு ரோட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், மின்சார துறை அமைச்சர் பி.தங்கமணி, உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் மற்றும் எம்.எல்.ஏக்கள் செம்மலை, எஸ்.ராஜா, வெங்கடாசலம், சக்திவேல், மனோன்மணி, வெற்றிவேல், சின்னதம்பி, பாஸ்கர், பொன் சரஸ்வதி, சேலம் மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார், சங்ககிரி உதவி கலெக்டர் ராமதுரைமுருகன், சங்ககிரி தாசில்தார் அருள்குமார், சங்ககிரி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் என்.எம்.எஸ்.மணி, கட்சியின் சங்ககிரி பேரூர் செயலாளர் செல்லப்பன், மாநில பொதுக்குழுஉறுப்பினர் என்.சி.ஆர்.ரத்தினம், முன்னாள் தொகுதி செயலாளர் வி.ஆர்.ராஜா உள்பட பலர் கலந்து கொண்டு, தீரன் சின்னமலை உருவப்படத்திற்கு மலர் வளையம் வைத்தும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில், அரசு அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிறுவனர் தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமையில், மாநில இளைஞர்அணிசெயலாளர் சூரியமூர்த்தி, மாநில பொருளாளர் பாலு, சேலம் தெற்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் ரமேஷ், சேலம் தெற்கு மாவட்ட பொருளாளர் திருமணன், முன்னாள் மாவட்ட செயலாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டு மாலை அனிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

Related Tags :
Next Story