வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி - நாளை மறுநாள் தொடங்குகிறது


வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச தொழிற்பயிற்சி - நாளை மறுநாள் தொடங்குகிறது
x
தினத்தந்தி 4 Aug 2018 12:15 PM IST (Updated: 4 Aug 2018 12:15 PM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான இலவச தொழிற்பயிற்சி நாளை மறுநாள் தொடங்குகிறது.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் வெங்கடாசலம் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு இலவச தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பயிற்சி அளிக்கப்படும் தொழிற்பயிற்சிகள் விவரம் வருமாறு:-

நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் 30 நாட்களுக்கு எலக்ட்ரிக்கல் மோட்டார் ரீவைண்டிங் பயிற்சிகளும், வருகிற 9-ந்தேதி முதல் 30 நாட்கள் எம்ராய்டரி மற்றும் பூ வேலைபாடு பயிற்சிகளும், வருகிற 13-ந்தேதி முதல் 30 நாட்கள் வெல்டிங் பேபிரிகேசன் பயிற்சிகளும், பியுட்டி பார்லர் மேனஜ்மெண்ட் வருகிற 16-ந்தேதி முதல் 30 நாட்கள் வரை பயிற்சிகளும், வருகிற 27-ந்தேதி முதல் 30 நாட்கள் வரை போட்டோகிராபி மற்றும் வீடியோகிராபி பயிற்சிகளும், அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி முதல் 30 நாட்கள் வரை பெண்களுக்கான ஆடைவடிவமைப்பு பயிற்சிகளும் அளிக்கப்படும்.

மேலும் அடுத்த மாதம் 17-ந்தேதி முதல் 30 நாட்கள் வரை அலுமினியம் பேபிரிகேசன், அடுத்த மாதம் 26-ந்தேதி முதல் 10 நாட்கள் வரை தேனீ வளர்ப்பு பயிற்சிகளும், அக்டோபர் 1-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை காய்கறி மேலாண்மை மற்றும் வளர்ப்பு பயிற்சிகளும், அக்டோபர் 10-ந்தேதி முதல் 10 நாட்கள் வரை கால்நடை வளர்ப்பு மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சிகளும், அக்டோபர் 15-ந்தேதி முதல் 30 நாட்கள் வரை செல்போன் ரிப்பேரிங் மற்றும் சர்வீசிங் பயிற்சிகளும், நவம்பர் 5-ந்தேதி முதல் 10 நாட்கள் வரை கோழி வளர்ப்பு பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.

நவம்பர் 12-ந்தேதி முதல் 10 நாட்கள் வரை கணினி ஹார்டுவேர்ஸ் நெட்வொர்க்கிங் பயிற்சிகளும், நவம்பர் 11-ந்தேதி முதல் 30 நாட்கள் வரை கணினி கணக்கியல் டேலி பயிற்சிகளும், டிசம்பர் 10-ந்தேதி முதல் 10 நாட்கள் வரை அப்பளம், ஊறுகாய், மசாலா தூள் தயாரித்தல் பயிற்சிகளும், அடுத்த ஆண்டு ஜனவரி 21-ந்தேதி முதல் 10 நாட்கள் வரை பேப்பர் உறை மற்றும் பைல் தயாரித்தல் பயிற்சிகளும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ந்தேதி முதல் 10 நாட்கள் வரை ஊதுபத்தி தயாரித்தல் பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு பிப்ரவரி 13-ந்தேதி முதல் 10 நாட்கள் வரை ஆடு வளர்ப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. பயிற்சிக்கு எவ்வித கட்டணமும் கிடையாது. பயிற்சியின் போது மதிய உணவு, தேநீர், நவீன தங்குமிடம் வசதி எவ்வித கட்டணமின்றி வழங்கப்படும். இதில் 20 முதல் 40 வரை உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். எழுத படிக்க தெரிந்து இருந்தால் போதும். விருப்பமுள்ளோர் தேவையான ஆவணங்கள் - தங்களின் குடும்ப அட்டை நகல், கல்வி சான்று நகல், 4 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, வறுமை கோட்டு எண் ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, திருச்சி மெயின் ரோடு, கீழப்பழுவூர், அரியலூர் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Next Story