மணப்பாறை அருகே நகை அடகு கடையில் திருடிய வாலிபர் கைது; 14 பவுன் நகை மீட்பு


மணப்பாறை அருகே நகை அடகு கடையில் திருடிய வாலிபர் கைது; 14 பவுன் நகை மீட்பு
x
தினத்தந்தி 4 Aug 2018 12:54 PM IST (Updated: 4 Aug 2018 12:54 PM IST)
t-max-icont-min-icon

மணப்பாறை அருகே நகை அடகு கடையில் திருடிய வாலிபரை கைது செய்து அவரிடம் இருந்த 14 பவுன் நகையை மீட்டனர்.

மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொய்கைப்பட்டியில் நகை அடகு கடை நடத்தி வருபவர் ரமேஷ். இவரது கடையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் வெள்ளி பொருட் களை திருடி சென்றுவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று மணப்பாறை போலீசார் மணப்பாறைபட்டி சாலையில் வாகன சோதனை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் வேகமாக சென்றார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் அவர் பொய்கைப்பட்டி நகை அடகு கடையில் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் அவர் மருங்காபுரி ஒன்றியம், வளநாடு அருகே உள்ள பாலப்பட்டியைச் சேர்ந்த சாம்பார் சுரேஷ் என்ற சுரேஷ் (வயது 31) என்றும், அவர் முசிறியை சேர்ந்த கமல் என்பவருடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டதும், பொய்கைப்பட்டி நகை அடகு கடையில் திருடிய வெள்ளிப் பொருட்களை ஒரு கடையில் கொடுத்து விற்று, தங்கமாக வாங்கி, அதனை பொன்னமராவதில் உள்ள நகை அடகு கடையில் அடகு வைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சுரேசை கைது செய்து அவரிடம் இருந்து 14 பவுன் நகைகளை மீட்டனர்.

Next Story