அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் போராட்டம்


அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் போராட்டம்
x
தினத்தந்தி 5 Aug 2018 4:15 AM IST (Updated: 5 Aug 2018 12:25 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்,

மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தியும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரியும், சுங்கச்சாவடி கட்டண வசூலை கைவிடக்கோரியும், நடத்துனர் இல்லாமல் பஸ்களை தமிழக அரசு இயக்கக்கூடாது, தனியார் லாபமடைய அரசு போக்குவரத்து கழகங்களை சீரழிக்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்கத்தினர் நேற்று காலை முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் கிளை செயலாளர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். தலைவர் ரவிச்சந்திரன், சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் செயலாளர் இளங்கோவன், ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்கத்தை தவிர தி.மு.க.வின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம், சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., பணியாளர் சம்மேளனம், பாட்டாளி தொழிலாளர் சங்கம், ம.தி.மு.க. தொழிற்சங்கம், அம்பேத்கர் தொழிலாளர் விடுதலை முன்னணி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களும் கலந்து கொண்டனர். காலையில் தொடங்கிய காத்திருப்பு போராட்டம் இரவு வரை நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story