மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பெரம்பலூர்,
சென்னை-சேலம் இடையே அமைக்கப்பட உள்ள 8 வழி பசுமை சாலை திட்டத்தை கைவிடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் திருவண்ணாமலையில் இருந்து சேலம் வரையிலான நடைபயணத்தை தொடங்கிய கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட பலரை போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கட்சியின் பெரம்பலூர், ஆலத்தூர் வட்ட செயலாளர் எஸ்.பி.டி.ராஜா தலைமை தாங்கினார். கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணனை கைது செய்த போலீசாரை கண்டித்தும், சென்னை-சேலம் இடையே அமைக்கப்பட உள்ள 8 வழி பசுமை சாலை திட்டத்தை தமிழக அரசு கைவிடக்கோரியும் பல்வேறு கோஷங்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எழுப்பினர். இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செல்லத்துரை, அகஸ்டின் மற்றும் கணேசன், முத்துசாமி, கருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story